தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரியில் 21.03.2022 முதல் 23.03.2022 வரை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வாயிலாக முதல் கட்ட மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் இறுதியாண்டு பயிலும் பட்டயப்படிப்பு மாணாக்கர்களுக்கு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரியிலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சியினை தலைசிறந்த தொழில் வல்லுனர்கள், திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் வங்கி மேலாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.






